ஆண்டுகள் இரண்டு
ஓடிவிட்டன உருண்டு
மும்பையின் புயல்வேக வாழ்க்கை
அதிரடியான அலுவலக வாழ்க்கை
என்றும் காதலிக்கும்
கண் எரியும் கணினிகள்,
என்றைக்கும் காதலித்திரா
கண்குளிரும் கவர்ச்சிக் கன்னிகள்,
காப்பிக் கோப்பையை
கை கோர்த்தபடியே
கூகிளில் காப்பியடித்த கோடுகள்.
ஒரு வார விடுமுறைக்கு
மாதக் கணக்கில்
கால் கடுக்கக் காத்திருந்த பொழுதுகள்.
வயிறு வாடினால் வடா பாவ்
நட்பு கூடினால் அர்ரே வாவ்
முடிந்தது மும்பை வாழ்வு நடந்தது நிறைய நிகழ்வு
அடைந்தது மனம் நிறைய நெகிழ்வு.
கிடைத்தது சென்னை செல்ல வாய்ப்பு.
அதற்குத்தான் எத்தனை நாளாய் எதிர்பார்ப்பு.
இங்கு செய்தவைதான் அங்கும்.
இருந்தும் அதற்கே மனம் ஏங்கும்.
பணம் சேர்க்க வந்தவன்
கூடவே சில நல்ல மனங்களையும்
கூட்டிச் செல்கிறேன்
போய்வருகிறேன் பம்பாய்
என்றைக்கும் என் நெஞ்சில் நீ இருப்பாய்.
Sunday, September 19, 2010
Subscribe to:
Comments (Atom)
