கதை கேளுங்கள் என்னிடம்
கதிரவன் கண்விழித்த நேரம்
காலாற நடந்து சென்றேன் சிறிது தூரம்
காற்றில் மீதமிருந்தது ஈரம்
மனத்தில் இல்லை பாரம்
மங்கலாய் ஓர் உருவம் சாலையின் ஓரம்
அங்கே நின்றது ஒரு பெண்
உடனே பாய்ந்தது என் கண்
பதில் பார்வை தந்தாள் பாவை
பாதிப்படைந்தவனுக்கு மருந்து ஆனது தேவை
காலமெல்லாம் செய்யச் சித்தமானேன் சேவை
நெஞ்சில் நிறைந்தது நேசம்
மனம் சென்றது அவள் வசம்
செல்ல நினைத்தேன் அவள் பக்கம்
திடீரென ஒரு சப்தம்
வந்தான் ஒருவன்
பார்த்தான் ஒரு கண்
யாரிவன்
இவள் நகைக்கிறாள்
அவன் அணைக்கிறான்
இணைந்து நடக்கிறார்கள்
நீண்டு சென்றது அவர்தம் கால் தடங்கள்
என்ன இது எனக்கு தடங்கல்
அட அற்பப் பயலே
அவர்கள் அதிகாலையில்
யாருமறியா வேளையில்
ஓடிச் சென்று
கூடி வாழப் போகிறார்கள்
நன்றாய் வாழட்டும் அந்த ஜோடி
நீ செல் உன் வழியை நாடி
ஆகாதே இரு நொடியில் பேடி

