Sunday, March 7, 2010

காதல் பறவை


பறவைகளும் காதல் புரியுமாம்.
அவைகள் புரிவது
பறவை மொழி.

நான் பார்க்கும் பாவை
புரிவது என்னவோ
பார்வை மொழிதான்.

அவள் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு
வேர்வை வழிதான்.
மனதெங்கும் வலிதான்.

இராட்சசி
இப்படிக் கொல்கிறாளே.
அவள் மனதில்
குடி கொள்கிறேன்
என்பதற்காக.

ஒரு பறவை
பிரிந்தால்
மறு பறவை
பரிதவிக்கும்.

என் பாவையவள்
பிரிந்தால்,
என்னிதயம்
ஏங்கும்.

"தூங்குனது போதும்
எந்திரிடா"

என எவரேனும்
எழுப்ப மாட்டாரா என.


No comments: