Wednesday, March 10, 2010

கயல்விழியாள்

நாள்தோறும்
நங்கை உன்
நளினம் பார்த்திருப்பேன்.

தினந்தோறும்
தேன்மொழியாள் உன்
தீண்டலுக்குத் துடித்திருப்பேன்.

தூண்டில் போட்டு
பிடிப்பார்கள் மீனை.
உன் விழியென்னும் மீனோ
என்னைத் தூண்டிலிட்டுப்
பிடிப்பதும் ஏனோ.

நா அசைந்தால்
மொழி உருப்பெரும்.
நின் விழி அசைந்தால்
நான் உருப்பெறுவேன்.

என்னிதயம்
ஏய்த்துப் பறித்தவளே
என் காலம் பொய்த்துப்
போயினும்
என்றும் உனை
நினைத்திருப்பேன்.
பேச்சு நின்றும்
மூச்சு நின்றும்
நினைவிழந்து போனாலும்
நின்னை இழக்க மாட்டேன்.

No comments: