Saturday, March 27, 2010

கடலைக் காதல்

அடம் பிடித்து
அழுகை புரிந்தால்
அது மழலை.

மனதில்
இடம் பிடித்து
அன்பு புரிந்தால்
அது கடலை.

கடலைக்கு
உதவிடவே
இறைவன் படைத்தானோ
கடலை?

மழலைக்குப் புரியாது
கவலை.
கடலைக்கணக்கு
சற்றே பிசகினும்
உன்னைப் பிரியாது
கவலை.

என்னவளும்
சில நேரம் மழலைதான்.
அவளுடன்
கழியும் காலமெல்லாம்
எனக்கில்லை கவலைதான்.

கடலை வேறு
காதல் வேறு
கடலை கடைசி வரை வாராது.
காதல் போக, வரவேண்டும் சாதல்.

காதலியின் கை பிடித்து
கடலை கொள்வேரே
காதலையும் கைப்பிடிப்பீராக.

சோகத்தில் முடிந்தால்
கவலை வேண்டாம்.
தினமும் குடிக்கலாம் பீராக.


No comments: