ஞாயிற்றுக்கிழமை,
ஓய்வெடுப்பதற்கென்றே
ஒதுக்கப்பட்ட
ஓர் உன்னத நாள்.
முன்னைய இரவில்
கண்விழித்துக்
கதைபேசி
காலம் கழியும்.
பின்னைய பகலில்
வெகுநேரம்
படுக்கையில் புரண்டு
பொழுது புலரும்
பல்துலக்கி
அல்லது
அதனை விலக்கி
பலகாரம் சாப்பிட்டு
படை கிளம்பும்
பரிவாரம்.
என்னவோர் ஆரவாரம்
வாரா வாரம்.
நண்பர்களுடன்
நட்பு செய்தும்
வம்பர்களுடன்
வம்பு செய்தும்
வீட்டில் உறங்கியும்
தெருவில் இறங்கியும்
ஓடியும் பாடியும்
ஓய்ந்து முடியும் ஓய்வு நாள்
கடந்துவிட்டது தூரம்
மாறிவிட்டது நேரம்
அலுவல் சேர்ந்த நேரம்
சனியும் இல்லை
ஞாயிறும் இல்லை
தொடர்கிறது தொல்லை
இதற்கு இல்லையா ஓர் எல்லை?
Monday, March 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment