Wednesday, December 15, 2010

மொபைல் உலகம்

ஸ்பெக்ட்ரம் ஊழல்

கொதிக்கிறது அனல்

பாராளுமன்றம் மட்டுமல்ல

என் மனமாளும் மங்கையும்தான்

காரணம் ஒன்றுதான்

சோகம் அங்குதான்

செல்பேசி

மொபைல் ஃபோன்

அட்டா, இதற்குத்தான் எத்தனை ஃபேன்

செல்லுமிடமெல்லாம் பேச்சு

அதுவே பலரது மூச்சு

தொலைபேசி போய்

செல்பேசி வந்து

அதனாலே சென்றான்

பலபேர் காசி

இனியாவது தோழரே, யோசி

வேண்டாம் இனி செல்லிடப்பேசி

எதையும் முடிக்கலாம் நேரில் சென்று பேசி.

வைத்துக் கொள்ளலாம் அவசர செய்திக்கு

வேண்டாமே அன்பின் செய்திக்கு.

முகம் பார்த்துப் பேசுவோம்

அகம் குளிருவோம்.