Sunday, February 7, 2010

மொக்கைக் குறிப்புகள்

ஊர் சென்று திரும்பினேன்
நண்பர்களிடம் செல்ல‌
விரும்பினேன்
எத்தனை முயன்றும்
முடியவில்லை
மனம் வருந்தினேன்
சிலபேருக்குத்
தொலைபேசியைச்
சுழற்றினேன்
பல நாள் பாரத்தைக்
கழற்றினேன்
கடற்கரையில்
சுற்றித்திரிய நினைத்தேன்
அடுப்பங்கரையில்
சுற்றித் திரிந்தேன்
தீனியெல்லாம்
தின்று தீர்த்தேன்
நெருங்கிவிட்டது
திரும்பும்காலம் என‌
உடம்பெங்கும் வேர்த்தேன்
வருவது வரட்டும் என‌
கடைசி தோசையை வார்த்தேன்.
தக்காளி சேர்த்துச் செய்த ஆம்லெட் நெகிழ்ந்தது
மனம் மகிழ்ந்தது.
ஆசையாய்ச் சாப்பிட்ட அண்ணனுக்கோ
முகம் நொந்தது.

என்ன செய்வது
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
செய்ததெல்லாம் ருசித்துவிட்டால்
ஹோட்டல் தேவையில்லை


No comments: