Thursday, February 11, 2010

பெயரில்லாப் பெண்

பெண்ணே, உன் பெயரென்ன.
சீக்கிரம் சொல்லிவிடு
உன் காதலி யார் என நண்பர்கள்
கேட்கும்பொழுதெல்லாம்
என் இதயத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரி
எனச் சொல்ல முடியவில்லை என்னால்.

இல்லையேல் கொலைகாரியாய் மாறி
என்னைக் கொன்றுவிடு.
ஆவியாகிவிட்டால் யார்கண்ணிலும் படாமல்
உன்னைத் தினமும் தரிசிப்பேன் அல்லவா.