இரவு நேரம்
நிலவும் உறங்கும் நேரம்
வழமைபோல் நான் கணினியின் ஓரம்
தரவுத்தளத்தில் தலையை
விட்டிருந்தேன்.
வலைத்தளத்தில் உலவவும்
மறக்கவில்லை.
வேட்டைக்காரன்
வேதனைப் பதிவுகளை
விவரித்திருந்தனர்
வலையுலக நண்பர்கள்
கவலையோடு
கண்ணும் கணினியுமாய்
கழிந்துகொண்டிருந்தது
காலமும்,
கணினியில் கானமும்
திடீரென வந்து குதித்தது
அச்செய்தி
மணமுடித்தேன்
என
மடலடித்திருந்தான் நண்பன்.
ஆகா,
கணினியை மட்டும்
காதலிக்கும் எங்கள்
கூட்டத்திலொருவன்
ஒரு கன்னியைக்
காதலித்து
கல்யாணமும்
செய்திருக்கிறான்.
முகம் மலர்ந்தது
அகம் குளிர்ந்தது
நண்பனே
இடரற்று
சுடர் பெற்று வாழ்ந்திடு
வாழ்நாளெல்லாம்
பாண்டிய மன்னன்
பெயர்கொண்டவனே
உனதவளுக்கு மன்னனாய் இருந்து
வேண்டிய விருப்பங்களை
செய்தளித்து சீருடன் வாழ
வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment