சென்னையில் நிலநடுக்கம்
மும்பையில் மனநடுக்கம்
சென்னையில் கட்டிடங்கள் குலுங்கின
மும்பையில் மருத்துவமனைகள் நிரம்பின
நாலுகால்ப் பாய்ச்சலில் வரும்
பன்றிக் காய்ச்சலினால்
பதறிப் போய் உட்கார்ந்திருக்க
ஊரிலிருந்து ஃபோன்.
"ரொம்ப ஆடாதடா, இங்க நாங்க ஆடறது போதும்"
ஆட்டமென்ன பாட்டமென்ன
வீடு ஆடினால் ஓட்டமெடுப்பதன்றோ முக்கியம்.
நாங்களோ, இங்கு முகமூடியோடு ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நிலம் ஆடுவது அடங்கட்டும் அங்கே.
பன்றிக்காய்ச்சல் வீரியம் விரைவில் குன்றட்டும் இங்கே.
Thursday, February 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment