தமிழ் மலையாளம் கலவை இவன்.
தமிழ்ப்புலமையில் ஒளவை இவன்
ஜாவா வாவா என அழைக்கும் இவனை
ஸ்காவா வாவா என அழைத்தது இவனை
புகைத்தே பொழுதைப் போக்குபவன் இவன்
கணினியின் எந்தப் பழுதையும்
பத்தே நொடியில் போக்குபவன் இவன்
பச்சைப் பட்டுக்கு அழகர் பிரபலம்
பச்சைப் பெட்டுக்கு பிரசாத் பிரபலம்
இவன் இருப்பது ஸ்காவாவின் பலம்.
எம் வி பி விருது பெற்றுள்ளான் நண்பன்
எம் சி பி விருது பெற காத்திருக்கின்றோம் நண்பர்கள் நாங்கள்
குறிப்பு :
கோவையில் ஸ்காவா நிறுவனத்தில் பணியிலிருக்கும் எனது நண்பன் பிரசாத் MVP விருது பெற்றமைக்காக எழுதப்பட்டுள்ள வாழ்த்து மடல்.
MVP - Most Valuable Player
MCB - McDowells Bottle

No comments:
Post a Comment