Friday, February 19, 2010

தண்ணீர் கண்ணீர்

வானம் தூற ஆரம்பித்துவிட்டது
ஆவலோடு எட்டிப்பார்க்கிறாள்
எதிர்வீட்டுச் சுட்டிப்பெண்
அப்படியென்ன ஓர் ஆர்வம் அதில்.
பள்ளிக்குச் செல்லாமலே
பாடம் படிக்கிறாளோ.
மழையில் என்ன பாடம் இருக்கப்போகின்றது
அறிவியலா, தத்துவமா?
வங்கக் கடல் ஆவியாகி மழையானதா
அதன் நடுவில் இருக்கும்
இலங்கை மக்கள் விட்ட கண்ணீர் மழையானதா
வங்கக் கடல் தண்ணீர் வற்றுமா
என் இனமக்கள் கண்ணீர் வற்றுமா

No comments: