Friday, February 19, 2010

தவறவிட்ட பட்டமளிப்பு விழா

மூன்றாண்டு காலம்
மறக்காது எந்நாளும்

வகுப்பில் இருந்த நாட்கள் குறைவு
இருப்பினும்
மனம் மகிழாமல் இருந்த நாட்கள் குறைவு

வாசித்த புத்தகங்கள் குறைவு
இருப்பினும்
நேசித்த நெஞ்ச‌ங்களில் இல்லை குறைவு

பெற்ற மதிப்பெண்கள் குறைவு
இருப்பினும்
கற்ற நற்பண்பினில் இல்லை குறைவு

அன்று கல்லூரி செல்லாமல் இருந்தமைக்காக‌
ஒருநாளும் வருந்தியதில்லை.
இன்று செல்ல முடியாமல் போனதற்காக‌
நான்கொண்ட வருத்தம்
ஒருநாளும் குறையப் போவதுமில்லை.

எல்லாம் இருப்பினும்
மனதில் மாபெரும் நிறைவு.

இந்த நாளில் என் நண்பர்களில்
எவரேனும் ஒருவராவது
என்னை நினைத்திருப்பார்கள் அங்கு.
அதுபோதும் எனக்கு

என் நினைவுகள்
கல்லூரியை முத்தமிட்டிருக்கும்.
காலமெல்லாம் அது நிலைத்திருக்கும்.

No comments: