Friday, February 26, 2010

சமையல் மொக்கை

கவிதை சமைத்த நாட்கள்
கடந்து போயின‌

சமையலறை
சமைக்கும் அறையாக‌
மாறியது ஒருவழியாக.

துணிமணிகள்
இருந்த இடம்
காய்கனிகள்
கண்காட்சியானது கடைசியில்.

சர்வர் சரியாக இருக்கிறதா
என சலிக்காமல் பார்த்து வந்தவன்
இப்பொழுதோ,
சாம்பார் சரியாக இருக்கிறதா
எனப் பார்க்கிறேன்.

மீசை மீது ஆசைகொண்டவன்
தோசை மீதும் ஆசைகொண்டு
வார்த்தெடுக்கிறேன்.

வருவது சரியில்லையெனினும்
வருத்தமில்லை.
நண்பர் இருக்கின்றனர்

ரோட்டோரக் கடையில்
முட்டைப் பொரியல்
கொரித்தவன்,
உதட்டோரம் எச்சில் வழிய‌
விழியோரம் நீர் வழிய‌
அரிகிறேன் வெங்காயம்.
பொரியப் போகும்
முட்டையை நினைத்து.

ஒரு நாளேனும்
தொல்லைகளிலிருந்து
தலை தப்புமா
என்றிருப்பவன்.
காலை எழுந்தவுடன் உப்புமா
என்கின்றேன் இன்று.

வாழ்வெனும் நாடகத்தில்
ஒரு பாத்திரமாய் இருந்தவன்.
சமையலறையில்
பாத்திரமோடு பாத்திரமாய்
பதுங்குகிறேன் இன்று.


மனதில் மகிழ்ச்சி
நெஞ்சில் நெகிழ்ச்சி
போய் வாங்க வேண்டும் இஞ்சி.
வருகிறேன்.

1 comment:

Unknown said...

suberb yusuf

bachelor's life pathi nee alagaa sollirukka